ஏசாயா 41:13-17

ஏசாயா 41:13-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏனெனில், யெகோவாவாகிய நானே உன் இறைவன். நானே உனது வலதுகையைப் பிடித்து, பயப்படாதே, உனக்கு நான் உதவி செய்வேன் என்று சொல்கிறவர். பயப்படாதே, யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் சிறுகூட்டமே, நான், நானே உனக்கு உதவி செய்வேன்” என்று, உனது மீட்பரும் இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய யெகோவா அறிவிக்கிறார். “இதோ, நான் உன்னை ஒரு சூடடிக்கும் கருவியாக்குவேன், அது புதியதும், கூர்மையானதும், அநேக பற்களை உடையதுமான கருவி. நீ மலைகளை போரடித்து, அவைகளை நொறுக்குவாய்; நீ குன்றுகளைப் பதராக்குவாய். நீ அவைகளைத் தூற்றுவாய், காற்று அவைகளை அள்ளிக்கொண்டுபோய், புயல்காற்று அவைகளை வாரிக்கொண்டு போகும். ஆனால் நீயோ, யெகோவாவில் அகமகிழ்ந்து, இஸ்ரயேலின் பரிசுத்தரில் மேன்மை அடைவாய். “ஏழைகளும், எளியவர்களும் தண்ணீரைத் தேடுவார்கள்; ஆனால் அங்கு ஒன்றுமிராது. அவர்களின் நாவுகள் தாகத்தினால் வறண்டுபோகும். ஆனால் யெகோவாவாகிய நான் அவர்களுக்குப் பதிலளிப்பேன்; இஸ்ரயேலின் இறைவனாகிய நான் அவர்களைக் கைவிடமாட்டேன்.

ஏசாயா 41:13-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்கிறேன். யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய். அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ யெகோவாவுக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக்கொண்டிருப்பாய். சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடைக்காமல், அவர்கள் நாக்கு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

ஏசாயா 41:13-17 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் உனது தேவனாகிய கர்த்தர். நான் உனது வலது கையைப் பற்றியிருக்கிறேன். ‘நான் உனக்குச் சொல்கிறேன்: பயப்படாதே! நான் உனக்கு உதவுவேன்.’ விலையேறப்பெற்ற யூதாவே, பயப்படாதே. எனது அருமை இஸ்ரவேல் ஜனங்களே! கலங்க வேண்டாம்! நான் உங்களுக்கு உண்மையாகவே உதவுவேன்.” கர்த்தர் தாமாகவே இவற்றைக் கூறினார். “நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும் (தேவன்) உன்னைக் காப்பாற்றுகிறவரும் இதனைக் கூறுகிறார். பார்! நான் உன்னை போரடிப்பதற்கான புதிய கருவியாக்குவேன். அது கூர்மையான பற்களை உடையது. விவசாயிகள் இதனைப் பயன்படுத்தி போரடிப்பார்கள். அவர்கள் தானியத்தை அதிலிருந்து பிரிப்பார்கள். நீ மலைகளின் மேல் நடந்து அவற்றை நசுக்குவாய். நீ குன்றுகளைப் பதர்களைப்போன்று ஆக்கிவிடுவாய். நீ அவற்றைக் காற்றில் தூற்றிவிடுவாய். அவற்றைக் காற்று அடித்துச்சென்று, சிதறடித்துவிடும். பிறகு, நீ கர்த்தருக்குள் மகிழ்ச்சியுடன் இருப்பாய். இஸ்ரவேலின் பரிசுத்தமானவரைப்பற்றி (தேவன்) நீ மிகவும் பெருமை அடைவாய்.” “ஏழ்மையும் தேவையும் கொண்ட ஜனங்கள் தண்ணீருக்காக அலைவார்கள். ஆனால் அவர்கள் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்கள் தாகமாக இருக்கிறார்கள். அவர்களின் நாக்கு உலர்ந்துபோயிற்று. அவர்களின் ஜெபத்திற்கு இஸ்ரவேலின் தேவனும் கர்த்தருமாகிய நான் பதில் சொல்வேன். நான் அவர்களை விடமாட்டேன். அவர்கள் மரிக்கவும் விடமாட்டேன்.

ஏசாயா 41:13-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள இயந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய். அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக் கொண்டிருப்பாய். சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.

ஏசாயா 41:13-17

ஏசாயா 41:13-17 TAOVBSIஏசாயா 41:13-17 TAOVBSIஏசாயா 41:13-17 TAOVBSI