ஆதியாகமம் 47:9
ஆதியாகமம் 47:9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதற்கு யாக்கோபு பார்வோனிடம், “என் வாழ்க்கைப் பயணம் நூற்று முப்பது வருடங்கள். என் வருடங்கள் என் முற்பிதாக்களின் வாழ்க்கைப் பயணத்தின் வருடங்களுக்குச் சமமானது அல்ல; அவை குறைவானதும், கஷ்டமானதுமாய் இருந்தன” என்றான்.
ஆதியாகமம் 47:9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அதற்கு யாக்கோபு: “நான் பரதேசியாக வாழ்ந்த நாட்கள் 130 வருடங்கள்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் வேதனை நிறைந்ததுமாக இருக்கிறது; அவைகள் பரதேசிகளாக வாழ்ந்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை” என்று பார்வோனுடனே சொன்னான்.
ஆதியாகமம் 47:9 பரிசுத்த பைபிள் (TAERV)
“ஏராளமான துன்பங்களோடு மிகக் குறுகிய காலமே வாழ்ந்திருக்கிறேன். என் வயது 130 ஆண்டுகளே. எனது தந்தையும் அவருடைய முற்பிதாக்களும் என்னைவிட அதிகக் காலம் வாழ்திருக்கிறார்கள்” என்றான்.