ஆதியாகமம் 4:23
ஆதியாகமம் 4:23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
லாமேக் தன் இரு மனைவிகளிடம் சொன்னதாவது: “ஆதாளே, சில்லாளே, எனக்குச் செவிகொடுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள். என்னைக் காயப்படுத்தியபடியால் ஒரு மனிதனைக் கொன்றேன், எனக்குத் தீங்கு செய்தபடியாலேயே அந்த வாலிபனைக் கொன்றேன்.
ஆதியாகமம் 4:23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: “ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, நான் சொல்வதை மிகவும் கவனமாகக் கேளுங்கள்; எனக்குக் காயமுண்டாக்கிய ஒரு மனிதனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக்கிய ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்
ஆதியாகமம் 4:23 பரிசுத்த பைபிள் (TAERV)
லாமேக்கு தன் மனைவிகளிடம், “ஆதாளே, சில்லாளே என் பேச்சைக் கேளுங்கள். நீங்கள் லாமேக்கின் மனைவியர், நான் சொல்வதைக் கவனியுங்கள். என்னை ஒருவன் துன்புறுத்தினான், அவனை நான் கொன்றேன். என்னுடன் இளைஞன் மோதினான், எனவே அவனையும் கொன்றேன்.