ஆதியாகமம் 30:22-24
ஆதியாகமம் 30:22-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பின்பு இறைவன் ராகேலையும் நினைவுகூர்ந்தார்; அவளுடைய வேண்டுதலைக் கேட்டு அவளுக்கும் பிள்ளைப்பேற்றைக் கொடுத்தார். அவள் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்று, “இறைவன் என் அவமானத்தை நீக்கிவிட்டார்” என்று சொன்னாள். அவள் அவனுக்கு யோசேப்பு எனப் பெயரிட்டு, “யெகோவா இன்னும் ஒரு மகனை எனக்குக் கொடுப்பாராக” என்றாள்.
ஆதியாகமம் 30:22-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பமடையச் செய்தார். அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும், இன்னும் ஒரு மகனைக் யெகோவா எனக்குத் தருவார்” என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டாள்.
ஆதியாகமம் 30:22-24 பரிசுத்த பைபிள் (TAERV)
பிறகு தேவன் ராகேலின் பிரார்த்தனையைக் கேட்டு, அவளும் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தார். அவள் கர்ப்பமாகி ஒரு குமாரனைப் பெற்றாள். “தேவன் எனது அவமானத்தை அகற்றி ஒரு குமாரனைத் தந்துவிட்டார்” என்று மகிழ்ச்சியடைந்தாள். அவள் தன் குமாரனுக்கு யோசேப்பு என்று பெயர் வைத்தாள்.
ஆதியாகமம் 30:22-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும், இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள்.