யாத்திராகமம் 6:28-30
யாத்திராகமம் 6:28-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யெகோவா எகிப்தில் மோசேயுடன் பேசியபோது, யெகோவா மோசேயிடம், “நானே யெகோவா. நான் உனக்குச் சொல்லும் எல்லாவற்றையும் எகிப்திய அரசன் பார்வோனுக்குச் சொல்” என்றார். ஆனால் மோசேயோ யெகோவாவிடம், “நான் திக்குவாயுள்ளவன். பார்வோன் எப்படி எனக்குச் செவிகொடுப்பான்?” என்றான்.
யாத்திராகமம் 6:28-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவா எகிப்துதேசத்தில் மோசேயோடு பேசின நாளில்; யெகோவா மோசேயை நோக்கி: “நானே யெகோவா; நான் உன்னோடு சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல்” என்று சொன்னபோது, மோசே யெகோவாவுடைய சந்நிதானத்தில்: “நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எப்படி என்னுடைய சொல்லைக் கேட்பான் என்றான்.
யாத்திராகமம் 6:28-30 பரிசுத்த பைபிள் (TAERV)
எகிப்தில் தேவன் மோசேயிடம் பேசினார். அவர், “நானே கர்த்தர். நான் உன்னிடம் கூறுகின்றவற்றை எகிப்து ராஜாவிடம் சொல்” என்றார். ஆனால் மோசே, “நான் பேச திறமையில்லாதவன். ராஜா எனக்குச் செவிசாய்க்கமாட்டான்” என்று பதிலளித்தான்.
யாத்திராகமம் 6:28-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தர் எகிப்துதேசத்திலே மோசேயோடே பேசின நாளில்: கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது, மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.