பிரசங்கி 7:8-10
பிரசங்கி 7:8-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும். இந்நாட்களைப்பார்க்கிலும் முன் நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.
பிரசங்கி 7:8-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒரு காரியத்தின் தொடக்கத்தைப் பார்க்கிலும், அதின் முடிவு நல்லது; பெருமையைப் பார்க்கிலும் பொறுமையே சிறந்தது. உள்ளத்தில் கோபத்திற்கு இடங்கொடாதே, ஏனெனில் கோபம் மூடர்களின் மடியிலே குடியிருக்கும். “இந்த நாட்களைவிட முந்திய நாட்கள் நலமாய் இருந்தது ஏன்?” என்று கேட்காதே. இப்படியான கேள்விகளைக் கேட்பது ஞானமுள்ள செயல் அல்ல.
பிரசங்கி 7:8-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஒரு காரியத்தின் ஆரம்பத்தைவிட அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைவிட பொறுமையுள்ளவன் உத்தமன். உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே; மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும். இந்த நாட்களைவிட முன்னான நாட்கள் நலமாக இருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.
பிரசங்கி 7:8-10 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒன்றைத் துவங்குவதைவிட முடிப்பது நல்லது. ஒருவன் வீண் பெருமையும், பொறுமையின்மையும் கொள்வதைவிட கனிவும், பொறுமையும் சிறந்தது. விரைவாகக் கோபம் அடையாதே. ஏனென்றால் கோபம் முட்டாளாக்கும். “இந்நாட்களைவிட ‘அக்கால நாட்கள்’ நன்றாக இருந்தன என்று சொல்லாதே. என்ன நடந்தது?” என்று கேட்காதே. அந்தக் கேள்வியைக் கேட்கும்படி ஞானம் நம்மை வழிநடத்தாது.