பிரசங்கி 11:5-6
பிரசங்கி 11:5-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய். காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.
பிரசங்கி 11:5-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
காற்றின் வழியையோ, தாயின் கருப்பையில் குழந்தை உருவாகும் விதத்தையும் உன்னால் அறிய முடியாது. அதுபோலவே எல்லாவற்றையும் படைக்கும் இறைவனின் செயல்களையும் விளங்கிக்கொள்ள உன்னால் முடியாது. உனது தானியத்தைக் காலையில் விதை, பிற்பகல் முழுவதும் உனது கைகளை நெகிழவிடாமல் விதை. இதுவோ, அதுவோ, எது பலன் தரும் என்பது உனக்குத் தெரியாதே; ஒருவேளை இரண்டுமே நல்ல பலனைக் கொடுக்கலாம்.
பிரசங்கி 11:5-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாமல் இருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறிந்துகொள்வதில்லை. காலையிலே உன்னுடைய விதையை விதை; மாலையிலே உன்னுடைய கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாகப் பயன்படுமோ என்றும் நீ அறியமாட்டாய்.
பிரசங்கி 11:5-6 பரிசுத்த பைபிள் (TAERV)
காற்றின்வழி யாதென்று உனக்குத் தெரியாது. தாயின் கருவிலே ஒரு குழந்தை எவ்வாறு வளர்கின்றது என்பதும் உனக்குத் தெரியாது. இதைப்போலவே, தேவன் என்ன செய்வார் என்பதும் உனக்குத் தெரியாது. அவர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார். எனவே அதிகாலையிலே நடுவை செய். மாலைவரை உன் வேலையை நிறுத்தாமல் செய். ஏனென்றால், எது உன்னை செல்வந்தனாக்கும் என்பதும் உனக்குத் தெரியாது. நீ செய்கிற அனைத்துமே உனக்கு வெற்றியைத் தரலாம்.