2 சாமுவேல் 22:48-51
2 சாமுவேல் 22:48-51 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே, நாடுகளை எனக்குக்கீழ் வைக்கிறவர் அவரே. அவர் என்னை என் பகைவரிடமிருந்து விடுவித்தார். யெகோவாவே நீர் என்னை என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தியிருக்கிறீர். என்னை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாத்தீர். ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; உமது பெயருக்குத் துதிகள் பாடுவேன். “அவர் தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்; அவர் தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும் அவனுடைய சந்ததிகளுக்கும் தமது உடன்படிக்கையின் அன்பை என்றைக்கும் காண்பிக்கிறார்.”
2 சாமுவேல் 22:48-51 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர். அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனிதனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். இதனால் யெகோவாவே, தேசங்களுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்கு துதிப் பாடல்கள் பாடுவேன். தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்செய்த தாவீதுக்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.”
2 சாமுவேல் 22:48-51 பரிசுத்த பைபிள் (TAERV)
என் பகைவர்களை எனக்காகத் தண்டிக்கும் தேவன் அவர். ஜனங்களை என் ஆட்சியின் கீழ் அவர் வைக்கிறார். தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காத்தீர்! என்னை எதிர்த்தவர்களைத் தோற்றோடச் செய்தீர். கொடியவர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தீர்! கர்த்தாவே, ஆகையால் எல்லா தேசங்களும் அறியும்படி நாம் உம்மைத் துதிப்பேன். எனவே உமது பேரில் நான் பாடல்கள் பாடுகிறேன். கர்த்தர், தன் ராஜா போரில் வெல்லும்படி செய்கிறார்! கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவுக்கு உண்மையான அன்பைக் காட்டுகிறார். அவர் தாவீதுக்கும் அவன் சந்ததிகளுக்கும் எப்போதும் உண்மையாக இருப்பார்!
2 சாமுவேல் 22:48-51 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர் எனக்காகப் பழிக்குப் பழி வாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர். அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன். தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.