2 சாமுவேல் 22:17-20
2 சாமுவேல் 22:17-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“அவர் என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்; ஆழமான தண்ணீரிலிருந்து என்னை வெளியே தூக்கினார். அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும் என்னிலும் அதிகம் பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார். அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்; ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார். அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்; அவர் என்னில் பிரியமாய் இருந்தபடியால் என்னைத் தப்புவித்தார்.
2 சாமுவேல் 22:17-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, வெள்ளப்பெருக்கில் இருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். என்னைவிட பெலவானாக இருந்த என்னுடைய எதிரிக்கும் என்னுடைய விரோதிகளுக்கும் என்னை விடுவித்தார். என்னுடைய ஆபத்து நாளிலே எனக்கு எதிராக வந்தார்கள்; யெகோவாவோ எனக்கு ஆதரவாக இருந்தார். என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
2 சாமுவேல் 22:17-20 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் எனக்கும் உதவினார்! கர்த்தர் மேலிருந்து கீழே வந்தார். கர்த்தர் என்னை துன்பத்திலிருந்துக் காப்பாற்றினார். என் பகைவர்கள் என்னைவிட பலமானவர்கள். அவர்கள் என்னை வெறுத்தார்கள். என் பகைவர்கள் என்னை வெல்லக் கூடியவர்கள்! எனவே தேவன் தாமே என்னை பாதுகாத்தார். நான் தொல்லையில் இருந்தேன். என் பகைவர்கள் என்னை தாக்கினார்கள். ஆனால் எனக்கு உதவிச்செய்ய கர்த்தர் இருந்தார்! கர்த்தர் என்மேல் பிரியமாயிருக்கிறார். எனவே என்னைக் காத்தார். பாதுகாப்பான இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்.
2 சாமுவேல் 22:17-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார். என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.