2 இராஜாக்கள் 2:23-25
2 இராஜாக்கள் 2:23-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவன் அவ்விடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழிநடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள். அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது. அவன் அவ்விடத்தைவிட்டுக் கர்மேல் பர்வதத்திற்குப்போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.
2 இராஜாக்கள் 2:23-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அங்கிருந்து எலிசா பெத்தேலுக்குப் போனான். அவன் வீதி வழியாக நடந்து கொண்டிருக்கும்போது பட்டணத்திலிருந்து சில வாலிபர்கள் வந்து, “மொட்டைத் தலையா ஏறிப்போ, மொட்டைத் தலையா ஏறிப்போ” என்று கூறி அவனைக் கேலி செய்தார்கள். அவன் திரும்பிப்பார்த்து, யெகோவாவின் பெயரால் அவர்களைச் சபித்தான். அப்போது இரண்டு கரடிகள் காட்டுக்குள்ளிருந்து வந்து அவர்களில் நாற்பத்திரண்டு வாலிபர்களைக் கொன்றுபோட்டது. அங்கிருந்து அவன் கர்மேல் மலைக்குப் போய், பின் சமாரியாவுக்குத் திரும்பிச்சென்றான்.
2 இராஜாக்கள் 2:23-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவன் அந்த இடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழியிலே நடந்துபோகும்போது வாலிபர்கள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி கேலி செய்தார்கள். அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: யெகோவாவின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு வாலிபர்களைக் கொன்றுபோட்டது. அவன் அந்த இடத்தைவிட்டுக் கர்மேல் மலைக்குப்போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.
2 இராஜாக்கள் 2:23-25 பரிசுத்த பைபிள் (TAERV)
எலிசா அங்கிருந்து பெத்தேல்வரை சென்றான். அவன் மலைமீது ஏறிக்கொண்டிருந்தபொழுது, சில சிறுவர்கள் நகரத்திலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். அவர்கள் அவனை கேலிச்செய்தார்கள். அவர்கள், “வழுக்கைத் தலையனே மேலே போ! வழுக்கைத் தலையனே மேலே போ” என்றனர். எலிசா திரும்பி அவர்களைப் பார்த்தான். அவர்களுக்குத் தீமை ஏற்படுமாறு கர்த்தரை வேண்டினான். உடனே இரண்டு கரடிகள் காட்டிலிருந்து வந்து அவர்களைத் தாக்கி 42 சிறுவர்களைக் கொன்றுபோட்டன. எலிசா பெத்தேலிலிருந்து கர்மேல் மலைக்குச் சென்றான். பின்னர் அங்கிருந்து சமாரியாவிற்குத் திரும்பிச்சென்றான்.