1 தெசலோனிக்கேயர் 4:1-2
1 தெசலோனிக்கேயர் 4:1-2 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கடைசியாக பிரியமானவர்களே, இறைவனைப் பிரியப்படுத்தும் விதத்தில் நீங்கள் எப்படி வாழவேண்டும் என்று நாங்கள் உங்களுக்கு அறிவுரைகள் கொடுத்திருந்தோம். உண்மையாய் நீங்கள் அப்படித்தான் நடக்கிறீர்கள். இப்பொழுது நாங்கள் உங்களிடம் கர்த்தராகிய இயேசுவில் கேட்கிறதும் வேண்டிக்கொள்கிறதும் என்னவென்றால், இன்னும் அதிகதிகமாய் தேறும்படிக்கு அவ்வாறே நடவுங்கள். கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தின்படியே, நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அறிவுரைகள் உங்களுக்குத் தெரியும்.
1 தெசலோனிக்கேயர் 4:1-2 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அன்றியும், சகோதரர்களே, நீங்கள் இந்தவிதமாக நடக்கவும், தேவனுக்குப் பிரியமாக இருக்கவும்வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாக முன்னேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவிற்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம். கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த வழிமுறைகளை அறிந்திருக்கிறீர்களே.
1 தெசலோனிக்கேயர் 4:1-2 பரிசுத்த பைபிள் (TAERV)
சகோதர சகோதரிகளே! நான் உங்களுக்கு வேறு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். தேவனுக்குப் பிடித்தமான வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்று நாங்கள் உங்களுக்குக் கற்பித்தோம். நீங்கள் அத்தகைய விதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மென்மெலும் அவ்வாறு வாழ கர்த்தராகிய இயேசுவின் பேரில் உங்களைக் கேட்டுக்கொள்வதோடு ஊக்கப்படுத்தவும் செய்கிறோம். நாங்கள் செய்யச் சொன்னவற்றை நீங்கள் அறிவீர்கள். அவற்றை நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் அதிகாரத்தால் சொன்னோம்.
1 தெசலோனிக்கேயர் 4:1-2 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்னபிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம். கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே.