சங்கீதம் 32:8

சங்கீதம் 32:8 TAOVBSI

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

சங்கீதம் 32:8 க்கான வசனப் படங்கள்

சங்கீதம் 32:8 - நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.சங்கீதம் 32:8 - நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.சங்கீதம் 32:8 - நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 32:8

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன் சங்கீதம் 32:8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

5 நாட்களில்

அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....

தேவனின்  கண்கள் - எங்கும் நிறைந்த பார்வை சங்கீதம் 32:8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

தேவனின் கண்கள் - எங்கும் நிறைந்த பார்வை

5 நாட்களில்

பரிசுத்த வேதாகமத்திலும் மற்றும் தெய்வீக சூழல்களிலும் கூட “தேவனின் கண்கள்" என்பது தேவன் எங்கும் நிறைந்திருப்பதையும், தேவனின் சர்வ அறிவையும் குறிக்கிறது. இந்த அறிவு மனிதகுலத்தின் மீதான அவரது நிலையான கண்காணிப்பை முக்கியப்படுத்தி காட்டுகிறது, விதிவிலக்கு இல்லாமல் அனைத்து செயல்களையும், சகல இருதயங்களின் நோக்கங்களையும், மற்றும் சூழ்நிலைகளையும் கூட தேவனுடைய கண்கள் பார்க்கிறது. இது அவரது விழிப்புணர்வை மட்டுமல்ல, அவருடைய ஆளுமையான அக்கறையையும் தீர்ப்பையும் குறிக்கிறது, எனவே விசுவாசிகளை நீதி மற்றும் பொறுப்புணர்வை நோக்கி வழிநடத்துகிறது. இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வது, நமது அன்றாட வாழ்வில் தேவனுடைய ஞானம் மற்றும் வழிகாட்டுதலின் மீது நம்முடைய பயபக்தியையும் சார்ந்திருப்பதையும் ஆழமாக்குகிறது.