ஏசாயா 30:15

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஏசாயா 30:15

அமைதிநேரம் - தேவனுடன் தனிமையில் செல்லவிடுவது  ஏசாயா 30:15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

அமைதிநேரம் - தேவனுடன் தனிமையில் செல்லவிடுவது

5 நாட்கள்

தேவாதி தேவனுடன் அமைதியான நேரத்தை செலவிடுவது மிக முக்கியம். சங்கீதம் 46:10-“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்”. இதனால் அமைதியாக இருக்கவும், தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கவும் முடிகிறது. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.” ஜெபிப்பதற்காக ஒரு தனிப்பட்ட இடத்திற்கு வரும்படி இயேசு நம்மை ஊக்குவிக்கிறார். இவ்வித அமைதியின் மூலம், நமது ஆற்றல் அளவினை அதிகரிப்பதை மட்டுமின்றி உடல் மற்றும் மனதினையும் சீரமைத்துக் கொள்ள முடியும்.

மனஅழுத்தம் ஏசாயா 30:15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

மனஅழுத்தம்

9 நாட்களில்

வாழ்க்கை என்பது ஒவ்வொரு நபரும் கிட்டத்தட்ட சகிப்புத்தன்மையுடனும் விடாமுயற்சியுடனும் போராடி மேற்கொள்ளும் ஒரு பந்தயமாகும். சில சமயங்களில், குடும்பம், திருமணம், வேலை, போன்றவற்றிற்கு நாம் ஆற்ற வேண்டிய சகலவித கடமைகளாலும் நாம் நெருக்கப்பட்டு, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல், போட்டியிட்டு வெற்றி பெற செயல்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம், அதனால் ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நாம் இழக்க நேரிடலாம். இந்தத் திட்டத்தில், இப்படிப்பட்ட நெருக்கடிகளை மேற்கொண்டு, ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் சமாதானம் மற்றும் சந்தோஷத்தால் நிரப்பப்படுவது எப்படி என்பதை நாம் காண்போம்.