பிலிப்பியர் 2:14-26

பிலிப்பியர் 2:14-26 TAOVBSI

நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன். இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள். அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன். அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை. மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள். ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன். அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன். மேலும், என் சகோதரனும், உடன் வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன். அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த பிலிப்பியர் 2:14-26

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல் பிலிப்பியர் 2:14-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

3 நாட்களில்

கவனச்சிதறல்கள் மற்றும் சவால்கள் நிறைந்த உலகில், நோக்கமுள்ள மற்றும் உண்மையுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ நம் இதயங்களைக் காப்பது அவசியம். பொதுவாக பயம், முறுமுறுத்தல், நண்பர்களின் அழுத்தம் மற்றும் ஏதோ ஒன்றில் மனநிறைவு இவற்றைத் தாண்டி வேதத்தில் வேரூன்றிய நடைமுறை பாடங்களை அறிய நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும். பொதுவாக விசுவாசிகள் வாழ்க்கையின் சோதனைகளை மேற்கொள்ளவும் வெற்றியுடன் வழிநடத்தவும், அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், தேவனின் விருப்பத்துடன் அவர்களின் இதயங்களைச் சீரமைக்கவும் தேவன் வாஞ்சிக்கிறார். இதற்காக உதவும் நுண்ணறிவு மற்றும் செயல்படக்கூடிய படிகளை நாம் அறியவும் நன்றியுணர்வை வளர்ப்பதற்கும், உறுதியாக நிற்பதற்கும், அவருடைய மகிமைக்காக தொடர்ந்து நம்பிக்கையுடன் வாழ்வதற்கும் ஒன்றாகப் பயணிப்போம்.