மாற்கு 15:16-24

மாற்கு 15:16-24 TAOVBSI

அப்பொழுது போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள். கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய், வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக்கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்.

தொடர்புடைய காணொளிகள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மாற்கு 15:16-24

ஈஸ்டர் என்பது சிலுவை - 4 நாள் வீடியோ திட்டம் மாற்கு 15:16-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

ஈஸ்டர் என்பது சிலுவை - 4 நாள் வீடியோ திட்டம்

4 நாட்களில்

எங்களின் "ஈஸ்டர் இஸ் தி கிராஸ்" டிஜிட்டல் காம்பைங் மூலம் ஈஸ்டரின் உண்மையான உணர்வை அனுபவிக்கவும், லுமோ ஈஸ்டர் திரைப்படங்களில் இருந்து ஊக்கமளிக்கும் வீடியோகள் மூலம் இயேசுவின் கதையை ஆராய இந்த சிறப்பு நிகழ்ச்சி உங்களை அழைக்கிறது, தனிப்பட்ட சிந்தனை, அர்த்தமுள்ள உரையாடல்கள் மற்றும் சமூக ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது. இயேசுவின் வாழ்க்கை, ஊழியம் மற்றும் பேரார்வம் ஆகியவற்றை சிறப்பித்துக் காட்டும் உள்ளடக்கத்துடன், இந்த திட்டம் பல மொழிகளில் வழங்கப்படுகிறது, ஈஸ்டர் சீசன் முழுவதும் நம்பிக்கை மற்றும் மீட்பின் செய்தியில் பகிர்ந்து கொள்ள அனைத்து பின்னணியிலிருந்தும் மக்களை ஒன்றிணைக்கிறது.

ஈஸ்டர் என்பது சிலுவை - 8 நாள் வீடியோ திட்டம் மாற்கு 15:16-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

ஈஸ்டர் என்பது சிலுவை - 8 நாள் வீடியோ திட்டம்

8 நாட்களில்