என் பிராணசிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள். என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது. என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன? ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு, அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும். என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது.
வாசிக்கவும் யோபு 19
கேளுங்கள் யோபு 19
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யோபு 19:19-27
23 நாட்கள்
இந்த வானமும் பூமியும் நாடகத்தில், சாத்தானைத் தாக்க கடவுள் அனுமதித்த நல்ல மனிதரான யோபைச் சந்திக்கிறோம்; மோசமான விஷயங்கள் ஏன் நடக்கின்றன என்பதைப் பற்றி அனைவருக்கும் பல கேள்விகள் உள்ளன. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் தினசரி வேலையில் பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்