ரோமர் 3:25-26

ரோமர் 3:25-26 TRV

கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டதனால் செலுத்தப்பட்ட பாவநிவாரணப் பலியாக அவரைப் பிரசித்தப்படுத்தி, அதன் பலனை மக்கள் விசுவாசத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளும்படி இறைவன் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். மக்கள் முற்காலத்தில் செய்த பாவங்களை அவர் தமது பொறுமையின் காரணமாக தண்டிக்காமல் விட்டாலும், தாம் நீதி உள்ளவர் என்பதை இந்தப் பலியினால் வெளிப்படையாகக் காண்பித்துள்ளார். அவர் இவ்வாறு நீதியை நிறைவேற்றியதுடன் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பவர்களை நீதிமான்கள் ஆக்குவதன் மூலமாகத் தமது நீதியான இயல்பையும் இக்காலத்தில் வெளிப்படையாகக் காண்பித்துள்ளார்.

ரோமர் 3:25-26 க்கான வீடியோ