வெளிப்படுத்தல் 14:9-11

வெளிப்படுத்தல் 14:9-11 TRV

மூன்றாவது இறைதூதன் அவர்களைத் தொடர்ந்து வந்து, உரத்த குரலில் சொன்னதாவது: “யாராவது மிருகத்தையும் மிருகத்தின் உருவச் சிலையையும் வணங்கி, தனது நெற்றியிலோ அல்லது கையிலோ அதனுடைய அடையாளத்தைப் பெற்றுக்கொண்டால், அவனும் இறைவனுடைய கோபத்தின் மதுவைக் குடிப்பான். அது அவருடைய கோபத்தின் கிண்ணத்தில், முழு வலிமையுடன் ஊற்றப்பட்டிருக்கிறது. அவன் பரிசுத்த தூதருக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் எரிகின்ற கந்தகத்தினால் வரும் வேதனையை அனுபவிப்பான். அவர்களது வேதனையின் புகை என்றென்றுமாய் மேலே எழுந்துகொண்டிருக்கும். மிருகத்தையும் அதன் உருவச் சிலையையும் வணங்குகின்றவர்களுக்கும், அதனுடைய பெயருக்குரிய அடையாளத்தைப் பெற்றுக்கொள்கின்றவர்களுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதல் இருக்காது.”

வெளிப்படுத்தல் 14:9-11 க்கான வீடியோ