எபிரேயர் 12:1-2

எபிரேயர் 12:1-2 TRV

எனவே இப்படிப்பட்ட பெருந்திரளான சாட்சிகள் ஒரு மேகத்தைப் போல் நம்மைச் சுற்றி இருக்கின்றதனால், நம்மைத் தடை செய்கின்ற எல்லா பாரத்தையும், நம்மை இலகுவாய் சிக்க வைக்கின்ற பாவத்தையும் அகற்றிவிட்டு, நமக்காக நியமிக்கப்பட்டிருக்கின்ற இந்த ஓட்டப் பந்தயத்தில் விடாமுயற்சியுடன் ஓடுவோம். விசுவாசத்தைத் தொடங்குபவரும், அதை நிறைவு செய்பவருமாகிய இயேசுவின்மீது நமது கண்களைப் பதிய வைப்போம். அவர் தமக்கு முன்பாக இருந்த மனமகிழ்ச்சியை நினைத்து, அவமானத்தை பொருட்படுத்தாமல் சிலுவையை சகித்து, இறைவனுடைய அரியணையின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்.