எருசலேமே, உனது உடன்படிக்கையை நாம் இரத்தத்தால் முத்தரித்தோம். எனவே நான் தரையில் துவாரங்களில் அடைப்பட்ட ஜனங்களை விடுதலை பண்ணுவேன். கைதிகளே, வீட்டிற்குப் போங்கள். இப்பொழுது நீங்கள் நம்பிக்கைக்கொள்ள இடமுண்டு. நான் திரும்பி உங்களிடம் வருவேன் என்று இப்பொழுது சொல்கிறேன். யூதாவே, நான் உன்னை வில்லைப் போல் பயன்படுத்துவேன். எப்பிராயீமே, நான் உன்னை அம்பாகப் பயன்படுத்துவேன். நான் உங்களை கிரேக்க நாட்டாருக்கு எதிராக வலிமையுள்ள வாளாகப் பயன்படுத்துவேன். கர்த்தர் அவர்களிடம் தோன்றுவார். அவர் தமது அம்புகளை மின்னலைப் போன்று எய்வார். எனது அதிகாரியாகிய கர்த்தர் எக்காளம் ஊதுவார். படையானது பாலைவனப் புயல்போல் விரையும். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அவர்களைக் காப்பார். வீரர்கள் பகைவர்களைத் தோற்கடிப்பதற்காகக் கற்களையும், கவண்களையும் பயன்படுத்துவார்கள். அவர்கள் பகைவரின் இரத்தத்தை வடியச் செய்வார்கள். அது திராரட்சைரசத்தைப் போன்று பாயும். அது பலிபீடத்தின் மூலைகளில் வழியும் இரத்தத்தைப் போன்று இருக்கும். அந்த நேரத்தில், அவர்களின் தேவனாகிய கர்த்தர், மேய்ப்பன் ஆடுகளைக் காப்பது போல காப்பார். அவருக்கு அவர்கள் விலைமதிப்பற்றவர்கள். அவர்கள் அவரது நாட்டில் ஒளிவீசும் நகைகளைப் போன்றவர்கள். எல்லாம் நல்லதாகவும், அழகானதாகவும் இருக்கும். அங்கே அற்புதமான அறுவடை இருக்கும். ஆனால் அது உணவாகவும், திராட்சைரசமாகவும் இருக்காது. இல்லை, இது இளம் ஆண்களும், பெண்களுமாய் இருக்கும்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: சகரியா 9:11-17
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்