சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:3-9

சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:3-9 TAERV

“நான் என் ஆடையைக் கழற்றிப்போட்டேன். நான் அதனை மீண்டும் அணிந்துக்கொள்ள விரும்பவில்லை. நான் என் பாதங்களைக் கழுவியிருக்கிறேன். அது மீண்டும் அழுக்காவதை நான் விரும்பவில்லை” ஆனால் என் நேசர் தனது கையை கதவுத் துவாரத்தின்வழியாக நீட்டினார். நான் அவருக்காக வருத்தப்பட்டேன். என் நேசருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன். என் கையிலிருந்து வெள்ளைப்போளமும் என் விரல்களிலிருந்து வெள்ளைப்போளமும் வடிந்து கதவின் கைப்பிடிமீது வழிந்தது. என் நேசருக்காகத் திறந்தேன் ஆனால் அவர் திரும்பிப் போய்விட்டார், அவர் இல்லை. அவர் வந்துபோனபோது நான் ஏறக்குறைய மரித்தவள் போலானேன். நான் அவரைத் தேடினேன் ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. நான் அவரை அழைத்தேன் ஆனால் அவர் எனக்குப் பதில் சொல்லவில்லை. நகரக் காவலர்கள் என்னைப் பார்த்தார்கள். அவர்கள் என்னை அடித்துக் காயப்படுத்தினர். அந்தச் சுவரின்மேல் நின்ற காவலர்கள் என் முக்காட்டை எடுத்துக்கொண்டனர். எருசலேமின் பெண்களே! நான் உங்களுக்குக் கூறுகிறேன் என் நேசரைக் கண்டால், நான் நேசத்தால் மெலிந்துகொண்டிருக்கிறேன் எனக் கூறுங்கள். அழகான பெண்ணே, உன் அன்பர் மற்ற நேசர்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்? உன் நேசர் மற்றவர்களைவிடச் சிறந்தவரா? எனவேதான் நீ எங்களிடம் இந்த வாக்குறுதியைக் கேட்கிறாயா?