சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:1-2

சாலொமோனின் உன்னதப்பாட்டு 5:1-2 TAERV

என் அன்பே! என் மணமகளே! நான் என் தோட்டத்திற்குள் நுழைந்தேன். நான் என் வெள்ளைப்போளங்களையும் கந்தவர்க்கங்களையும் சேகரித்தேன். நான் எனது தேனை தேன் கூட்டோடு தின்றேன். நான் எனது திராட்சைரசத்தையும், பாலையும் குடித்தேன். அன்பர்களே! உண்ணுங்கள், குடியுங்கள் அன்பின் போதை நிறைந்தவர்களாய் இருங்கள். நான் தூங்குகிறேன் ஆனால் என் இதயம் விழித்திருக்கிறது. என் நேசர் தட்டுவதை நான் கேட்கிறேன். “எனக்காகத் திற என் இனியவளே என் அன்பே என் புறாவே, என் மாசற்ற அழகியே! என் தலை பனியால் நனைந்துவிட்டது. என் தலைமயிர் இரவின் தூறலால் நனைந்துபோனது.”