சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:1-4

சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:1-4 TAERV

நான் சரோனில் பூத்த ரோஜா. பள்ளத்தாக்குகளில் மலர்ந்த லீலிபுஷ்பம்! எனது அன்பே! முட்களுக்கு இடையில் லீலி புஷ்பம்போல் நீ மற்ற பெண்களுக்கிடையில் இருக்கிறாய். என் அன்பரே! காட்டு மரங்களுக்கிடையில் கிச்சிலி மரத்தைப்போல் மற்ற ஆண்களுக்கிடையில் நீர் இருக்கிறீர். எனது நேசரின் நிழலில் உட்கார்ந்துகொண்டு நான் மகிழ்கிறேன். அவரின் கனி எனது சுவைக்கு இனிப்பாக உள்ளது. என் நேசர் என்னை விருந்து சாலைக்கு அழைத்துப்போனார். என்மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்துவதே அவரது நோக்கம்.