சங்கீத புத்தகம் 72:1-7

சங்கீத புத்தகம் 72:1-7 TAERV

தேவனே, ராஜாவும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும். உமது நல்லியல்பை ராஜாவின் குமாரனும் அறிந்துகொள்ள உதவும். ராஜா உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும். உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும். தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும். ஏழைகளுக்கு ராஜா நல்லவனாக இருக்கட்டும். திக்கற்றோருக்கு அவன் உதவட்டும். அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும். சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் ராஜாவுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன். என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன். வயலில் விழும் மழையைப்போன்றிருக்க ராஜாவுக்கு உதவும். பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும். அவன் ராஜாவாக இருக்கும்போது நன்மை மலரட்டும். சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீத புத்தகம் 72:1-7