சங்கீத புத்தகம் 63:1-5

சங்கீத புத்தகம் 63:1-5 TAERV

தேவனே, நீரே என் தேவன். நீர் எனக்கு மிகவும் தேவையானவர். நீரற்று உலர்ந்து பாழாய்போன தேசத்தைப்போன்று என் ஆத்துமாவும் சரீரமும் உமக்காகத் தாகமாயிருக்கிறது. உமது ஆலயத்தில் நான் உம்மைக் கண்டேன். நான் உமது வல்லமையையும் மகிமையையும் கண்டேன். ஜீவனைக் காட்டிலும் உமது அன்பு சிறந்தது. என் உதடுகள் உம்மைத் துதிக்கும். என் வாழ்நாளில் நான் உம்மைத் துதிப்பேன். உமது நாமத்தைக் கூறி ஜெபத்தோடு என் கைகளை உயர்த்துவேன். சுவையான உணவு வகைகளை உண்டது போல் நான் திருப்தியடைவேன். மகிழ்ச்சி நிறைந்த உதடுகளுள்ள என் வாய் உம்மைத் துதிக்கும்.