சங்கீத புத்தகம் 139:1-12

சங்கீத புத்தகம் 139:1-12 TAERV

கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர். என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர். நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர். வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர். கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர். நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர். கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள் என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர். கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன்புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர். நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர். நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது. நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது. கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது. கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர். மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர். கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர். நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர். அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும், என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர். கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும், பகல் இரவாக மாறிப்போயிற்று. “இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன். ஆனால் கர்த்தாவே, இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை. இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.