ஒபதியா 1:10-14

ஒபதியா 1:10-14 TAERV

நீ அவமானத்தால் மூடப்பட்டிருப்பாய். நீ என்றென்றைக்கும் அழிக்கப்படுவாய். ஏனென்றால், நீ உனது சகோதரனான யாக்கோபுடன் கொடூரமாக இருந்தாய். நீ இஸ்ரவேலின் பகைவரோடு சேர்ந்தாய். அந்நியர்கள் இஸ்ரவேலின் கருவூலங்களை எடுத்துச் சென்றார்கள். அயல்நாட்டுகாரர்கள் இஸ்ரவேலின் நகரவாசலில் நுழைந்தனர். அந்த அயல் நாட்டுக்காரர்கள் எருசலேமின் எந்தப் பகுதி அவர்களுக்கு வரும் என்று சீட்டுப்போட்டனர். அவர்களில் நீயும் ஒருவனாக உன் பங்கைப் பெறக் காத்திருந்தாய். நீ உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு சிரித்தாய். நீ அதனைச் செய்திருக்கக் கூடாது. ஜனங்கள் யூதாவை அழிக்கும்போது நீ மகிழ்ந்தாய். நீ அதனைச் செய்திருக்கக்கூடாது. நீ அவர்களின் துன்பத்தில் வீண் புகழ்ச்சி கொண்டாய். நீ அதனைச் செய்திருக்கக்கூடாது. நீ என் ஜனங்களின் நகரவாசலில் நுழைந்து அவர்களின் துன்பத்தைக் கண்டு சிரித்தாய். நீ அதனைச் செய்திருக்கக் கூடாது. அவர்களின் துன்பநேரத்தில் நீ அவர்களுடைய கருவூலங்களை எடுத்துக்கொண்டாய். நீ அதனைச் செய்திருக்கக் கூடாது. சாலைகள் சந்திக்கும் இடத்தில் நீ நின்று தப்பிச் செல்ல முயல்கிறவர்களை அழித்தாய். நீ அதனைச் செய்திருக்கக் கூடாது. நீ உயிரோடு தப்பியவர்களைக் கைது செய்தாய். நீ அதனைச் செய்திருக்கக் கூடாது.