மாற்கு எழுதிய சுவிசேஷம் 6:39-44

மாற்கு எழுதிய சுவிசேஷம் 6:39-44 TAERV

பிறகு இயேசு சீஷர்களிடம், “புல்லின் மேல் மக்கள் சிறு, சிறு குழுக்களாக உட்காரும்படி சொல்லுங்கள்” என்றார். ஆகவே எல்லா மக்களும் குழுக்களாக அமர்ந்தனர். ஒவ்வொரு குழுவிலும் 50 அல்லது 100 பேர் இருந்தனர். இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்துக் கொண்டார். அவர் வானத்தை ஏறிட்டுப் பார்த்தார். அந்த அப்பங்களுக்காக தேவனுக்கு நன்றி சொன்னார். பின்னர் இயேசு அப்பங்களை பங்கு வைத்துத் தன் சீஷர்களிடம் கொடுத்தார். அவற்றை மக்களுக்குக் கொடுக்குமாறு சொன்னார். மீனையும் அவ்வாறே பங்கிட்டு எடுத்துக் கொடுத்தார். எல்லா மக்களும் திருப்தியாக உண்டனர். மக்கள் உண்டு முடித்ததும் எஞ்சியுள்ளவற்றைச் சீஷர்கள் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேகரித்தனர். ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அன்று உணவு உண்டனர்.

தொடர்புடைய காணொளிகள்