லூக்கா எழுதிய சுவிசேஷம் 6:12-16

லூக்கா எழுதிய சுவிசேஷம் 6:12-16 TAERV

அக்காலத்தில் இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார். மறு நாள் காலையில் இயேசு தனது சீஷர்களை அழைத்தார். அவர்களுள் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களுக்கு “அப்போஸ்தலர்கள்” என்று பெயரிட்டார். அவர்கள்: சீமோன் (இயேசு அவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார்) அந்திரேயா என்னும் பேதுருவின் சகோதரன், யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு, மத்தேயு, தோமா, யாக்கோபு (அல்பேயுவின் குமாரன்), சீமோன் (செலோத்தே என்று அழைக்கப்பட்டவன்) யூதா, (யாக்கோபின் குமாரன்) யூதாஸ்காரியோத் என்பவர்கள் ஆவார்கள். இந்த யூதாஸ் இயேசுவைப் பகைவர்களிடம் ஒப்படைத்தவனாவான்.

லூக்கா எழுதிய சுவிசேஷம் 6:12-16 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்