எரேமியாவின் புலம்பல் 3:19-26

எரேமியாவின் புலம்பல் 3:19-26 TAERV

கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும். எனக்கு வீடு இல்லை. நீர் எனக்குக் கொடுத்த கசப்பான விஷத்தை (தண்டனையை) நினைத்துப்பாரும். நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன். ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன். பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன். நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்: கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை. கர்த்தருடைய இரக்கம் எப்பொழுதும் முடிவதில்லை. ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்! கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது! நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார், ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன். கர்த்தர் தனக்காகத் காத்திருக்கும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார். கர்த்தர் அவரைத் தேடும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார். ஒருவன் தன்னை இரட்சித்துக்கொள்ள கர்த்தருக்காக அமைதியாகக் காத்திருப்பது நல்லது.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எரேமியாவின் புலம்பல் 3:19-26