யோசுவாவின் புத்தகம் 17:3-6

யோசுவாவின் புத்தகம் 17:3-6 TAERV

எப்பேரின் குமாரன் செலொப்பியாத். கிலேயாத்தின் குமாரன் எப்பேர். மாகீரின் குமாரன் கிலேயாத், மனாசேயின் குமாரன் மாகீர், செலோப்பியாத்திற்கு குமாரர்கள் இருக்கவில்லை, அவனுக்கு ஐந்து பெண்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் ஆகியவை ஆகும். ஆசாரியனாகிய எலெயாசாரிடமும் நூனின் குமாரனாகிய யோசுவாவிடமும், எல்லாத் தலைவர்களிடமும் அப்பெண்கள் சென்று, “ஆண்களைப் போலவே எங்களுக்கும் நிலத்தைத் தரும்படியாக கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார்” என்றனர். எலெயாசார் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து அப்பெண்களுக்கும் கொஞ்சம் நிலம் கொடுத்தான். எனவே ஆண்களைப் போன்றே இந்த குமாரத்திகளும் நிலத்தைப் பெற்றார்கள். யோர்தான் நதிக்கு மேற்கே பத்துப் பகுதிகளையும், யோர்தான் நதிக்கு மறுகரையில் கீலேயாத், பாசான் ஆகிய பகுதிகளையும் மனாசே கோத்திரத்தினர் பெற்றனர். மனாசேயின் குமாரத்திகளும், குமாரர்களைப் போன்றே நிலத்தில் பங்கைப் பெற்றனர். கீலேயாத் தேசம் மனாசேயின் பிற குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்டது.

யோசுவாவின் புத்தகம் 17:3-6 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்