எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 22:15-16

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 22:15-16 TAERV

யோயாக்கீமும், உனது வீட்டில் ஏராளமாகக் கேதுரு மரங்களை வைத்திருக்கிறாய். அவை உன்னைப் பெரிய ராஜாவாக்காது. உன் தந்தை யோசியா உணவும் தண்ணீரும்பெற்று திருப்தி அடைந்தான். எது சரியானதோ நியாயமானதோ, அதைச் செய்தான். யோசியா அதனைச் செய்தான். அதனால் அவனுக்கு எல்லாமும் சரியாகப் போனது. யோசியா ஏழைகளுக்கும் யாருக்கெல்லாம் தேவை இருந்ததோ அவர்களுக்கும் உதவினான். ஆகையால், அவனுக்கு அனைத்துக் காரியங்களும் எளிமையாக நடந்தன. யோயாக்கீம், “தேவனை அறிவது” என்பதன் பொருள் என்ன? இதன் பொருள் சரியாக வாழு, நியாயமாக இரு, ஏழை எளியோருக்கு உதவு. என்னை அறிவது என்பதன் பொருள் இதுதான். இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.