கர்த்தாவே, நான் உம்மோடு வாதம் செய்தால் நீர் எப்பொழுதும் சரியாகவே இருப்பீர்! ஆனால், நான் உம்மிடம் சரியாக தோன்றாத சிலவற்றைப்பற்றி கேட்க விரும்புகிறேன். கெட்டவர்கள் ஏன் சித்தி பெறுகிறார்கள்? உம்மால் நம்பமுடியாதவர்கள், ஏன் இத்தகைய இலகுவான வாழ்க்கையைப் பெறுகிறார்கள்? நீர் அந்த கெட்ட ஜனங்களை இங்கே வைத்திருக்கிறீர், அவர்கள் பலமான வேர்களையுடைய செடிகளைப்போல் உள்ளனர். அவர்கள் வளர்ந்து கனிகளை உற்பத்தி செய்கின்றனர். அவர்கள் தம் வாயில் நீர் அவர்களோடு அன்பாகவும் நெருக்கமாகவும் இருப்பதாகக் கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் இதயத்தில் உண்மையில் உம்மை விட்டுத் தூரத்தில் உள்ளனர். ஆனால், கர்த்தாவே! நீர் என் இதயத்தை அறிவீர், நீர் என்னைப் பார்க்கிறீர். என் மனதை சோதிக்கிறீர். வெட்டுவதற்கு இழுத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போன்று அந்தத் தீய ஜனங்களை வெளியே இழுத்துப்போடும். அவர்களை வெட்டுவதற்குரிய நாளைத் தேர்ந்தெடும். இந்தப் பூமி இன்னும் எவ்வளவு காலத்திற்கு வறண்டிருக்கும்? இந்தப் புல் நிலங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்குக் காய்ந்து மடிந்திருக்கும்? இந்தப் பூமியிலுள்ள மிருகங்களும், பறவைகளும், செத்திருக்கின்றன. இது தீய ஜனங்களின் குற்றமாகும், எனினும் அத்தீய ஜனங்கள், “எரேமியா நமக்கு நிகழப்போவதைப் பார்க்க நீண்டகாலம் உயிர்வாழமாட்டான்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
வாசிக்கவும் எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 12
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 12:1-4
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்