ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 49:13-16

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 49:13-16 TAERV

வானங்களும் பூமியும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும். மலைகள் மகிழ்ச்சியோடு சத்தமிடட்டும். ஏனென்றால், கர்த்தர் தமது ஜனங்களை ஆறுதல் படுத்துகிறார். கர்த்தர் தமது ஏழை ஜனங்களிடம் நல்லவராக இருக்கிறார். ஆனால், இப்பொழுது சீயோன் கூறுகிறாள், “கர்த்தர் என்னைக் கைவிட்டுவிட்டார். எனது ஆண்டவர் என்னை மறந்துவிட்டார்.” ஆனால் நான் சொல்கிறேன், “ஒரு பெண்ணால் தன் குழந்தையை மறக்கமுடியுமா? முடியாது! ஒரு பெண்ணால் தன் கர்ப்பத்திலிருந்து வந்த குழந்தையை மறக்கமுடியுமா? இல்லை! ஒரு பெண்ணால் தன் பிள்ளையை மறக்கமுடியாது! ஆனால் அவள் மறந்தாலும் நான் (கர்த்தர்) உன்னை மறக்கமுடியாது. பார், நான் உனது பெயரை என் உள்ளங்கையில் செதுக்கி இருக்கிறேன். நான் எப்பொழுதும் உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன்!