ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 42:1-7

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 42:1-7 TAERV

“என் தாசனைப் பாருங்கள்! அவரை நான் ஆதரிக்கிறேன். நான் தேர்ந்தெடுத்த ஒருவர் அவரே. நான் அவரை மிகவும் விரும்புகிறேன். அவரில் எனது ஆவியை வைக்கிறேன். அவர் நாடுகளுக்கு நியாயமாக நீதி வழங்குவார். அவர் தெருக்களில் உரக்க பேசமாட்டார். அவர் கூக்குரலிடவும்மாட்டார். அவர் சாந்த குணமுள்ளவர். அவர் நெரிந்த நாணலைக்கூட முறிக்கமாட்டார். அவர் மங்கி எரிகிற திரியைக்கூட அணைக்கமாட்டார். அவர் நியாயத்தைத் தீர்த்து உண்மையைக் கண்டுகொள்வார். உலகத்தில் நியாயத்தைக் கொண்டுவரும்வரை அவர் பலவீனராகவோ அல்லது நொறுக்கப்படுபவராகவோ ஆவதில்லை. ஜனங்கள் தொலைதூர இடங்களிலிருந்து அவரது போதனைகளை நம்புவார்கள்.” உண்மையான தேவனாகிய கர்த்தர் இவற்றைச் சொன்னார். (கர்த்தர் வானங்களை உருவாக்கினார். கர்த்தர் பூமியின்மேல் வானத்தை விரித்தார். அவர் பூமியின்மேல் எல்லாவற்றையும் செய்தார். கர்த்தர் பூமியிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் சுவாசத்தைக் கொடுக்கிறார். கர்த்தர் பூமியில் நடமாடுகிற ஒவ்வொரு மனிதருக்கும் ஆவியைக் கொடுக்கிறார்). “கர்த்தராகிய நான், சரியானதைச் செய்ய உன்னை அழைத்தேன். நான் உன் கையைப் பற்றிக்கொள்வேன். நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் ஜனங்களோடு ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை பிறருக்குக் காட்டுவதற்கு வெளிப்புற அடையாளமாக நீ இருப்பாய். அனைத்து ஜனங்களுக்கும் ஒளி வீசும் விளக்காக நீ இருப்பாய். குருடர்களின் கண்களை நீ திறப்பாய், அவர்களால் பார்வையைப் பெறமுடியும். சிறையில் இருக்கிறவர்களை நீ விடுவிப்பாய். பலர் இருளில் இருக்கிறார்கள். அவர்களை அந்தச் சிறையில் இருந்து வெளியே அழைத்து வருவாய்.