பிறகு ஆபகூக் சொன்னான், “கர்த்தாவே, நீரே என்றென்றும் வாழ்கிற கர்த்தர். நீர் என்றென்றும் மரணமடையாத என் பரிசுத்தமான தேவன். கர்த்தாவே, நீர் பாபிலோனிய ஜனங்களை எதைச் செய்ய வேண்டுமோ அதற்காகப் படைத்தீர். எங்கள் அடைக்கலப் பாறையே, நீர் அவர்களை யூதாவிலுள்ள ஜனங்களை தண்டிப்பதற்காகப் படைத்தீர். உம்முடைய கண்கள் மிகவும் பரிசுத்தமானதால் அவை தீமையை நோக்குவதில்லை. ஜனங்கள் பாவம் செய்வதை உம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவே, இத்தீய ஜனங்கள் வெற்றிப்பெறுவதை எப்படி உம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியும். தீய ஜனங்கள் நல்லவர்களை அழிப்பதைக் கண்டு ஒன்றும் செய்யாமல் நீர் எப்படி பார்த்திருக்கக்கூடும்? “நீர் ஜனங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும், கடலில் உள்ள தலைவனற்ற சிறிய உயிரினங்களைப்போன்றும் படைத்துள்ளீர். பகைவர் அவர்களனைவரையும் தூண்டிலாலும் வலைகளாலும் பிடிப்பார்கள். பகைவன் தனது வலையால் அவர்களை பிடித்து இழுத்துப் போவான். பகைவன் தான் கைப்பற்றியதுப்பற்றி மகிழுவான். அவனது வலை அவன் செல்வந்தனாக வாழ்ந்து நல்ல உணவை உண்டு மகிழ உதவுகிறது. எனவே பகைவன் தனது வலைகளை தொழுதுகொள்கிறான், அவன் தனது வலையைக் கௌரவப்படுத்த பலிகளை செலுத்தி நறுமணப் பொருட்களையும் எரிக்கிறான். அவன் தனது வலையுடன் செல்வத்தைத் தொடர்ந்து எடுப்பானா? அவன் தொடர்ந்து இரக்கமில்லாமல் ஜனங்களை அழிப்பானா?
வாசிக்கவும் ஆபகூக் 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஆபகூக் 1:12-17
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்