யாத்திராகமம் 6:14-30

யாத்திராகமம் 6:14-30 TAERV

இஸ்ரவேல் குடும்பத் தலைவர்களில் சிலருடைய பெயர்கள் இங்குத் தரப்படுகின்றன: இஸ்ரவேலின் முதல் குமாரன் ரூபனுக்கு நான்கு குமாரர்கள். அவர்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ ஆகியோர். சிமியோனின் குமாரர்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், சவுல் ஆகியோர். (சவுல் கானானிய பெண்ணின் குமாரன்.) லேவி 137 ஆண்டுகள் வாழ்ந்தான். கெர்சோன், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் ஜனங்கள். கெர்சோனுக்கு, லிப்னீ, சிமேயீ என்னும் இரண்டு குமாரர்கள் இருந்தனர். கோகாத் 133 ஆண்டுகள் வாழ்ந்தான். கோகாத்தின் ஜனங்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் ஆகியோர். மெராரியின் ஜனங்கள் மகேலியும், மூசியுமாவர். இந்தக் குடும்பங்கள் அனைத்தும் இஸ்ரவேலின் குமாரன் லேவியிலிருந்து வந்தவை. அம்ராம் 137 ஆண்டுகள் வாழ்ந்தான். அவன் தன் தந்தையின் சகோதரியாகிய யோகெபேத்தை மணந்தான். அம்ராமும் யோகெபேத்தும், ஆரோனையும் மோசேயையும் பெற்றனர். கோராகு, நெப்பேக், சித்ரி ஆகியோர் இத்சேயாரின் குமாரர்கள். மீசவேல், எல்சாபான், சித்ரி ஆகியோர் ஊசியேலின் குமாரர்கள். எலிசபாளை ஆரோன் மணந்தான். (எலிசபா அம்மினதாபின் குமாரத்தியும், நகசோனின் சகோதரியுமாவாள்.) ஆரோனும் எலிசபாளும் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரைப் பெற்றனர். ஆசீர், எல்க்கானா, அபியாசாப் ஆகியோர் கோராகின் ஜனங்களும் கோராகியரின் முற்பிதாக்களும் ஆவார்கள். ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தயேலின் குமாரத்தி ஒருத்தியை மணந்தான். அவள் பினெகாசைப் பெற்றெடுத்தாள். இந்த ஜனங்கள் எல்லோரும் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குடும்பத்தினராவார்கள். ஆரோனும் மோசேயும், இந்த கோத்திரத்திலிருந்து வந்தனர். அவர்களிடம் தேவன் பேசி, “குழுக்களாக என் ஜனங்களை வழிநடத்து” என்றார். ஆரோனும், மோசேயும் எகிப்து மன்னன் பார்வோனிடம் பேசினார்கள். எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் போவதற்கு அனுமதிக்கும்படி அவர்கள் பார்வோனிடம் கூறினார்கள். எகிப்தில் தேவன் மோசேயிடம் பேசினார். அவர், “நானே கர்த்தர். நான் உன்னிடம் கூறுகின்றவற்றை எகிப்து ராஜாவிடம் சொல்” என்றார். ஆனால் மோசே, “நான் பேச திறமையில்லாதவன். ராஜா எனக்குச் செவிசாய்க்கமாட்டான்” என்று பதிலளித்தான்.