நீங்கள் விசுவாசம் இல்லாத மற்ற மக்களைப் போன்றவர்கள் அல்லர். எனவே நீங்களாகவே சென்று அவர்களோடு சேராதீர்கள். நல்லவையும் கெட்டவையும் சேரக் கூடாது. வெளிச்சமும் இருட்டும் சேர்ந்திருக்க முடியாது. எப்படி கிறிஸ்துவும் சாத்தானும் உடன்பாடுகொள்ள முடியும்? ஒரு விசுவாசிக்கும், விசுவாசம் இல்லாதவனுக்கும் பொதுவாக என்ன இருக்க முடியும்? தேவனுடைய ஆலயமானது வெறும் சிலைகளோடு எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்? நாம் ஜீவனுள்ள தேவன் வாழும் ஆலயங்களைப் போன்றுள்ளோம். “நான் அவர்களோடு வாழ்வேன்; நடப்பேன்; நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்களே எனது மக்களாக இருப்பார்கள்.” “எனவே அவர்களை விட்டுவிட்டு வெளியே வாருங்கள். அவர்களிடமிருந்து தனியாக உங்களைப் பிரித்துக்கொள்ளுங்கள். சுத்தமில்லாத எதையும் தொடவேண்டாம். நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.” “நான் உங்களின் பிதாவாக இருப்பேன். நீங்கள் எனது குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் இருப்பீர்கள் என்று எல்லா வல்லமையும் கொண்ட கர்த்தர் கூறுகிறார்”
வாசிக்கவும் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 6
கேளுங்கள் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 6
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 6:14-18
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்