தாவீதிடம் அவனது ஆட்கள், “கர்த்தர் சொன்ன நாள் இதுவே! கர்த்தர், ‘நான் உனது பகைவனை உன்னிடம் தருவேன். நீ அவனை என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்’ என்று சொல்லியிருக்கிறார்” என்றார்கள். தாவீது சவுலின் அருகில் ஊர்ந்து சென்றான். சவுலின் சால்வை நுனியை அறுத்தான். அதனைச் சவுல் கவனிக்கவில்லை. பின்னர் இதற்காக தாவீது வருத்தப்பட்டான். தாவீது தன் ஆட்களிடம், “மீண்டும் நான் என் எஜமானனுக்கு இதுபோல் செய்துவிடாமல் கர்த்தர்தான் தடுக்க வேண்டும், சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா. அவருக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன்!” என்றான். தாவீது தனது ஆட்களையும் சவுலுக்குத் தீமை செய்துவிடாமல் பார்த்துக்கொண்டான். சவுலும் அந்தக் குகையை விட்டு வெளியேறிச் சென்றான். தாவீது வெளியே வந்து சவுலைப் பார்த்து, “என் ஆண்டவனாகிய ராஜாவே” என்று சத்தமிட்டான். தாவீது தரையில் முகம் குப்புற வணங்குவதை சவுல் திரும்பிப் பார்த்தான்.
வாசிக்கவும் சாமுவேலின் முதலாம் புத்தகம் 24
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: சாமுவேலின் முதலாம் புத்தகம் 24:4-8
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்