நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 29:8-13

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 29:8-13 TAERV

ஜனங்கள் விலையுயர்ந்த கற்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்கு கொடுத்தனர். யெகியேல் இக்கற்களைக் காக்கும் பொறுப்பாளி ஆனான். இவன் கெர்சோன் குடும்பத்தவன். தலைவர்கள் மகிழ்ச்சியோடு இவ்வாறு பொருட்களைக் கொடுத்ததால் ஜனங்களும் மகிழ்ச்சியடைந்தனர். தலைவர்கள் நல்ல மனதோடு கொடுத்தனர். தாவீது ராஜாவும் மகிழ்ந்தான். பிறகு தாவீது அனைத்து ஜனங்களின் முன்பாக கர்த்தரை துதித்தான். தாவீது: “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எங்கள் தந்தையே, எல்லா காலங்களிலும் உமக்கு துதி உண்டாவதாக! மாட்சிமை, வல்லமை, மகிமை, வெற்றி, மகத்துவம் அனைத்தும் உமக்குரியவை. ஏனென்றால் மண்ணிலும், விண்ணிலும் உள்ள அனைத்தும் உமக்குரியவை. கர்த்தாவே இராஜ்யம் உமக்குரியது. நீரே தலைவர், எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர் நீரே. செல்வமும், மகத்துவமும் உம்மிடம் இருந்து வரும். நீர் எல்லாவற்றையும் ஆளுகிறீர். உமது கையில் வல்லமையும் அதிகாரமும் உள்ளது! எவரையும் வல்லமையும், அதிகாரமும் உள்ளவனாக்கும் வல்லமையும் உமது கையில் உள்ளது! இப்போது எங்கள் தேவனே, உமக்கு நன்றி. நாங்கள் உமது பெருமைக்குரிய நாமத்தைத் துதிப்போம்!

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்