யோயேல் 2:1-4

யோயேல் 2:1-4 TCV

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த குன்றிலே எச்சரிப்பின் ஒலியை எழுப்புங்கள். நாட்டில் வாழும் அனைவரும் நடுங்குவார்களாக; ஏனெனில், யெகோவாவின் நாள் வருகிறது. அது நெருங்கி வந்திருக்கிறது. அது இருளும் காரிருளும் கலந்த நாள், மப்பும் மந்தாரமும் நிறைந்த நாள். விடியற்காலை வெளிச்சம் மலைகளின்மீது பரவுவதுபோல் வலிமைமிக்க வெட்டுக்கிளிகளின் பெரும் படையொன்று வருகிறது! இதுபோன்ற படை முற்காலத்தில் இருந்ததுமில்லை, வரப்போகும் காலங்களில் இருக்கப் போவதுமில்லை. அவற்றிற்கு முன்னாக நெருப்பு சுட்டெரிக்கும், அவற்றிற்கு பின்னாக நெருப்புப் பற்றியெரியும். அவற்றிற்கு முன்னாக நாடு ஏதேன் தோட்டத்தைப் போலவும், அவற்றிற்குப் பின்னாக நாடு பாழான பாலைவனம் போலவும் இருக்கிறது; அவற்றிலிருந்து தப்புவது எதுவுமேயில்லை. அவை குதிரைகளின் தோற்றமுடையவை; அவை குதிரைப் படைபோல் பாய்ந்தோடுகின்றன.

யோயேல் 2:1-4 க்கான வசனப் படம்

யோயேல் 2:1-4 - சீயோனிலே எக்காளம் ஊதுங்கள்,
என் பரிசுத்த குன்றிலே எச்சரிப்பின் ஒலியை எழுப்புங்கள்.

நாட்டில் வாழும் அனைவரும் நடுங்குவார்களாக;
ஏனெனில், யெகோவாவின் நாள் வருகிறது.
அது நெருங்கி வந்திருக்கிறது.
அது இருளும் காரிருளும் கலந்த நாள்,
மப்பும் மந்தாரமும் நிறைந்த நாள்.
விடியற்காலை வெளிச்சம் மலைகளின்மீது பரவுவதுபோல்
வலிமைமிக்க வெட்டுக்கிளிகளின் பெரும் படையொன்று வருகிறது!
இதுபோன்ற படை முற்காலத்தில் இருந்ததுமில்லை,
வரப்போகும் காலங்களில் இருக்கப் போவதுமில்லை.

அவற்றிற்கு முன்னாக நெருப்பு சுட்டெரிக்கும்,
அவற்றிற்கு பின்னாக நெருப்புப் பற்றியெரியும்.
அவற்றிற்கு முன்னாக நாடு ஏதேன் தோட்டத்தைப் போலவும்,
அவற்றிற்குப் பின்னாக நாடு பாழான பாலைவனம் போலவும் இருக்கிறது;
அவற்றிலிருந்து தப்புவது எதுவுமேயில்லை.
அவை குதிரைகளின் தோற்றமுடையவை;
அவை குதிரைப் படைபோல் பாய்ந்தோடுகின்றன.