ஏசாயா 58:6-10

ஏசாயா 58:6-10 TCV

“நான் தெரிந்துகொண்ட உபவாசம் என்பது: அநீதியின் சங்கிலிகளைத் தளர்த்துவதும், நுகத்தின் கயிறுகளை அவிழ்ப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலையாக்குவதும், ஒவ்வொரு நுகத்தையும் உடைத்துப் போடுவதும் அல்லவோ? பசியுற்றோருடன் உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்வதும், வீடற்ற ஏழைகளுக்கு இருப்பிடம் கொடுப்பதும், உடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு உடை கொடுப்பதும், உன் சொந்த உறவினர்களிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிக்கொள்ளாதிருப்பதும் அல்லவோ? அப்பொழுது உனது வெளிச்சம் விடியற்காலை வெளிச்சத்தைப்போல் பிரகாசிக்கும்; நீ விரைவில் சுகவாழ்வு துளிர்க்கும். உங்கள் நீதி உங்கள்முன் செல்லும், யெகோவாவின் மகிமை உங்களைப் பின்னாலே காக்கும். அப்பொழுது நீ கூப்பிடுவாய், யெகோவா பதிலளிப்பார்; நீ உதவிகேட்டு அழுவாய், ‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று அவர் சொல்வார். “ஒடுக்கும் நுகத்தையும், பிழையைச் சுட்டிக்காட்டும் விரலையும், தீமையின் பேச்சையும் நீக்கிவிடு. பசியுற்றோருக்கு உன்னையே கொடுத்து, ஒடுக்கப்பட்டோரின் தேவையைத் திருப்தியாக்கு. அப்பொழுது இருளில் உன்னுடைய வெளிச்சம் உதிக்கும், உன்னுடைய இரவும் மத்தியானத்தைப்போல் இருக்கும்.