அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி: யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட யெகோவா உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியிலிருந்து தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார். யோசுவாவோ என்றால் அழுக்கு உடை அணிந்தவனாகத் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு உடைகளைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிடத்திலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த உடையை உடுத்தினேன் என்றார். அவன் தலையின்மேல் சுத்தமான தலைப்பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான தலைப்பாகையை அவன் தலையின்மேல் வைத்து, அவனுக்கு ஆடைகளை உடுத்தினார்கள்; யெகோவாவுடைய தூதன் அங்கே நின்றார்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் சகரி 3
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: சகரி 3:2-5
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்