சங் 95:1-7

சங் 95:1-7 IRVTAM

யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைப் புகழ்ந்து பாடக்கடவோம் வாருங்கள். துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, பாடல்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடுவோம். யெகோவாவே மகா தேவனும், எல்லா தெய்வங்களுக்கும் மகாராஜனுமாக இருக்கிறார். பூமியின் ஆழங்கள் அவருடைய கையில் இருக்கிறது; மலைகளின் உயரங்களும் அவருடையவைகள். கடல் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; காய்ந்த தரையையும் அவருடைய கரம் உருவாக்கினது. நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடுவோம் வாருங்கள். அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் மக்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.