சங் 63:1-5

சங் 63:1-5 IRVTAM

தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது. இப்படியே பரிசுத்த இடத்தில் உம்மைப்பார்க்க ஆசையாக இருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். உயிரைவிட உமது கிருபை நல்லது; என்னுடைய உதடுகள் உம்மைத் துதிக்கும். என்னுடைய உயிர் உள்ளவரை நான் உம்மைத் துதித்து, உமது பெயரை சொல்லிக் கையை உயர்த்துவேன். நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங் 63:1-5

அமைதிநேரம் - தேவனுடன் தனிமையில் செல்லவிடுவது  சங் 63:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

அமைதிநேரம் - தேவனுடன் தனிமையில் செல்லவிடுவது

5 நாட்கள்

தேவாதி தேவனுடன் அமைதியான நேரத்தை செலவிடுவது மிக முக்கியம். சங்கீதம் 46:10-“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்”. இதனால் அமைதியாக இருக்கவும், தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கவும் முடிகிறது. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.” ஜெபிப்பதற்காக ஒரு தனிப்பட்ட இடத்திற்கு வரும்படி இயேசு நம்மை ஊக்குவிக்கிறார். இவ்வித அமைதியின் மூலம், நமது ஆற்றல் அளவினை அதிகரிப்பதை மட்டுமின்றி உடல் மற்றும் மனதினையும் சீரமைத்துக் கொள்ள முடியும்.