சங் 120

120
சங்கீதம் 120
ஆரோகண பாடல்.
1என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்;
அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும்.
3வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்?
உனக்கு என்ன செய்யப்படும்?
4பலவானுடைய கூர்மையான அம்புகளும்,
சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
5ஐயோ, நான் மேசேக்கிலே#120:5 மேசேக்கு கருங்கடலுக்கும் காசுப்பியன் கடலுக்கும் மத்தியில் உள்ள பகுதியாகும். கேதார் சீரியவின் தமஸ்குக்கு தென்பகுதியில் உள்ள பகுதியாகும் இங்கு நாடோடிகள் வாழ்ந்து வந்தார்கள் இவர்கள் மிகவும் வெறித்தனமானவர்களாய் இருந்தார்கள் வாழ்ந்தது போதும்,
கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்!
6சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
7நான் சமாதானத்தை நாடுகிறேன்;
அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங் 120: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்