நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதும் இல்லை என்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான வம்சத்தின் நடுவிலே குற்றம் இல்லாதவர்களும் கபடு இல்லாதவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாக இருப்பதற்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பு இல்லாமலும் வாக்குவாதம் இல்லாமலும் செய்யுங்கள். மேலும், உங்களுடைய விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் பானபலியாக வார்க்கப்பட்டுப் போனாலும், நான் மகிழ்ந்து, உங்கள் அனைவரோடும் சேர்ந்து சந்தோஷப்படுவேன். இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள். அன்றியும், நானும் உங்களுடைய செய்திகளைத் தெரிந்து மன ஆறுதல் அடைவதற்குச் சீக்கிரமாகத் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்பலாம் என்று கர்த்தராகிய இயேசுவிற்குள் நம்பியிருக்கிறேன். ஆகவே, உங்களுடைய காரியங்களை உண்மையாகக் கவனிப்பதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனைத்தவிர வேறுயாரும் என்னிடம் இல்லை. மற்ற எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். தகப்பனுக்குப் பிள்ளை ஊழியம் செய்வதுபோல, அவன் என்னோடு சேர்ந்து நற்செய்திக்காக ஊழியம் செய்தான் என்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள். ஆகவே, என் காரியங்கள் எப்படி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறேன். அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேன் என்று கர்த்தருக்குள் விசுவாசமாக இருக்கிறேன். மேலும், என் சகோதரனும், உடன்வேலைக்காரனும், கிறிஸ்துவின் படைவீரனும், உங்களுடைய தூதுவனாகவும், என்னுடைய குறைவில் உதவி செய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடம் அனுப்பவேண்டும் என்று நினைத்தேன். அவன் உங்கள் எல்லோர்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே அதிக மனச்சோர்வு அடைந்தவனாகவும் இருக்கிறான்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் பிலி 2
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: பிலி 2:14-26
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்