அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளச்செய்தார். என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன். என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன். எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது. இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன். நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர். யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது. அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக. நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக. தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக. ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார். அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை.
வாசிக்கவும் புலம் 3
கேளுங்கள் புலம் 3
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: புலம் 3:16-33
2 நாட்கள்
நீங்கள் சொல்வதைக் கேளுங்கள், கடவுளுடைய வார்த்தையைப் பற்றிக் கற்றுக் கொள்ளுங்கள், லிங்குவேஷன் புத்தகத்தில் இங்கே தொடங்குங்கள்
5 நாட்களில்
ஜர்னலிங் என்பது .உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள அவற்றை எழுதுவது ஆகும்.நாம் மன அழுத்தம், மனச்சோர்வு அல்லது பதட்டத்துடன் போராடினால், ஒரு ஜர்னல் அல்லது ஒரு குறிப்பேடு வைத்திருப்பது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும். பிலிப்பியர் 4:6-7 [6] நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். [7] அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.இது நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
3 நாட்களில்
புலம்பல்கள் என்பது பைபிளின் "அழுகும் சுவர்" ஆகும், இது தூக்கியெறியப்பட்ட பின்னர் சாம்பலில் கிடக்கும் ஜெருசலேமின் இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட வேண்டிய துயரம் நிறைந்த கவிதைகளின் தொகுப்பாகும். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் புலம்பல்களின் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்