யோசு 23:11-13

யோசு 23:11-13 IRVTAM

ஆகவே, உங்களுடைய தேவனாகிய யெகோவா விடம் அன்புசெலுத்தும்படி, உங்களுடைய ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாக இருக்கிற இந்த மக்களோடு சேர்ந்துகொண்டு, அவர்களோடு சம்பந்தம் கலந்து, நீங்கள் அவர்களிடமும் அவர்கள் உங்களிடமும் உறவாடினால், உங்களுடைய தேவனாகிய யெகோவா இனி இந்த தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகும்வரைக்கும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்களுடைய முதுகுகளுக்குச் சவுக்காகவும், உங்களுடைய கண்களுக்கு முட்களாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாக அறியுங்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோசு 23:11-13

திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வு யோசு 23:11-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

திருமண பயணம் - சிறை வாழ்விலிருந்து ஜெய வாழ்வு

5 நாட்கள்

திருமணம் என்பது ஒரு வாழ்க்கை பயணத்தின் துவக்கம். ஆனால் அது ஒரு பயணத்தின் முடிவாக(destination) கருதும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதினிமித்தம் அந்த ஒரே நாளுக்காக ஆடம்பரமான செலவுகள் நடக்கின்றது. ஆனால் இந்த திருமண பயணத்தில் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பது ஒருவருக்கும் தெரிவதில்லை. திருமண வாழ்க்கையை எகிப்திலிருந்து கானானுக்கு இஸ்ரவேலர் மேற்கொண்ட பயணத்துடன் நாம் ஒப்பிடலாம். இந்த வாழ்க்கை பயணத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடையாளம் காண ஆண்டவர் உங்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் ஜெபம்.