ஏசா 58:3-9

ஏசா 58:3-9 IRVTAM

நாங்கள் உபவாசிக்கும்போது நீர் கவனிக்காமல் இருக்கிறதென்ன? நாங்கள் எங்களுடைய ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் ஆசையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாகச் செய்கிறீர்கள். இதோ, வழக்குக்கும் தர்க்கத்திற்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்களுடைய கூக்குரலை உயரத்திலே கேட்கச்செய்வதற்காக, இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசிக்காதீர்கள். மனிதன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் சணல் ஆடையிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் யெகோவாவுக்குப் பிரியமான நாளென்றும் சொல்வாய்? அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணைப்புகளை தளர்த்துகிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் உணவைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்தப்பட்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்கிறதும், ஆடையில்லாதவனைக் கண்டால் அவனுக்கு ஆடை கொடுக்கிறதும், உன் உறவினனுக்கு உன்னை மறைக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்குப் பிரியமான உபவாசம். அப்பொழுது விடியற்கால வெளிச்சத்தைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; யெகோவாவுடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். அப்பொழுது நீ கூப்பிடுவாய், யெகோவா மறுமொழி கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்வார். நுகத்தடியையும், குற்றம்சாட்டுதலையும், அநியாய வார்த்தைகளையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி